தனிநபர் சராசரி வருமானம் 50 % அளவுக்கு அதிகரித்துள்ளது என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2024 – 25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
“பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது, முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. மகளிர் தொழில் முனைவோருக்கு 30 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பலமுனை பொருளாதார நிர்வாக மேம்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியை அடையும்.
மிக அதிகமான பணவீக்க தருணத்தில் ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தனிநபர் சராசரி வருமானம் 50 % அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கம் மூலம் வரி கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, ஒரே தேசம்-ஒரே சந்தைக்கு வழிவகுத்துள்ளது. வரி அடிப்படையிலான வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி உத்வேகம் அளிக்கிறது. அனைத்துத்தரப்பு வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
மொத்தமாக 43 கோடி முத்ரா கடன்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் 70 சதவீத வீடுகள் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராகி வருகிறது” என கூறினார் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“80 கோடி பேருக்கு இலவச ரேஷன்” : நிர்மலா சீதாராமன்
ஃபாஸ்டேக் கேஒய்சி அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!