தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற குழு பார்வையிட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் நிறைவேற்ற உள்ளார்.
இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள், தமிழ்நாடு சட்டப்பேரவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகர் மில்டன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இன்று காலை சட்டமன்றத்திற்கு வந்தனர்.
சபாநாயகர் அப்பாவு அறையில் அவருடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து விஐபி கேலரியில் அமர்ந்து ஆஸ்திரேலிய நாடாளுமன்ற குழு சட்டமன்ற நிகழ்வுகளை பார்வையிட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பேசியது என்ன?