திமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும்! ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மும்முனைக் கூட்டணி பிரச்சாரங்கள் அனல் பறந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் சென்னை மயிலாப்பூர் (ஆர்.ஆர்.சபா) ரசிகரஞ்சனி சபாவில் ஆடிட்டர் குருமூர்த்தி தலைமையில் முக்கியக் கூட்டம் ஒன்று நடந்தது. கூட்டத்தில் அதிகளவில் பிராமணர்கள் மற்றும் பாஜக ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் உட்பட சுமார் 900 பேர் கலந்து கொண்டனர்.

முக்கியப் பிரமுகர்களாக துக்ளக் ரமேஷ், மாரிதாஸ், பாலசுப்ரமணியன், பட்டிமன்றப் பேச்சாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி,

“பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது, கடந்த காலங்களில் அதிமுகவினர் திமுகவை விமர்சனம் செய்வார்கள், திமுகவினர் அதிமுகவை விமர்சனம் செய்வார்கள். இப்படியே மாறி மாறி ஆட்சி செய்து வந்தனர் திராவிடக் கட்சிகள். தற்போது அதிமுக, திமுக இரண்டு கட்சியும் சேர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பாஜகவின் பெரும் வளர்ச்சியாகும்.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களில் வெற்றி பெறும். ஏழு தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் வருவோம். 29 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் வருவோம்.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஆனால் வாக்கு சதவீதம் பயங்கரமாகக் குறையும். நமது இலக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் பெற்றாக வேண்டும். நிச்சயம் பெறுவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் யார் என்று பாஜக தான் முடிவு செய்யும்.

ஒவ்வொரு தேர்தலிலும் 15 முதல் 20 சதவீதம் வரையில் மக்கள் வாக்களிப்பதில்லை. அவர்களில்  பெரும்பாலானோர் மேட்டுக்குடியைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த ஓட்டுகள் பாஜக ஓட்டுகள், அதனால் மேட்டுக்குடியைச் சார்ந்தவர்களை வரக்கூடிய தேர்தலில் வாக்களிக்கச் செய்யுங்கள். நமது நோக்கம் திராவிட அரசியலை ஒழிப்பது” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

குருமூர்த்தி பேச்சைக் கேட்ட முதல்வர் டென்ஷனாகி பாஜக தமிழகத்தில் ஒரு சீட் கூட வரக்கூடாது என்று ஆலோசனை செய்து வருகிறாராம்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்?

“GST: வரி அல்ல… வழிப்பறி” : புள்ளிவிவரத்துடன் ஸ்டாலின் விமர்சனம்!

மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts