கோவை பீப் கடை விவகாரம்: பாஜக அலுவலகம் மீது வீசப்பட்ட மாட்டுக்கறி!

Published On:

| By christopher

கோவையில் பீப் உணவுக்கடை விவகாரத்தில், தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்யகோரி பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது மாட்டுக் கறி வீச முயன்ற ஆதித்தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி – ஆபிதா தம்பதி தள்ளுவண்டியில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநகர் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி என்பவர், “இங்கு பீப் விற்பனை செய்யக் கூடாது” என்று மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கோயில் அருகே இருப்பதாலும், ஊர் கட்டுப்பாடு என்பதாலும் அங்கு பீப் கடை இயங்க அனுமதி இல்லை என்று சுப்பிரமணி கூறினார்.

இதற்கு ரவி – ஆபிதா தம்பதி, “அவர்கள் சொன்னதால் கடை போடும் இடத்தை மாற்றிவிட்டோம். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் விடுக்கிறார்கள். எங்களுக்கு தெரிந்த தொழிலை தான் நாங்கள் செய்ய முடியும். இதேபோல காவல்துறையும் மிரட்டுகிறார்கள்.” என்று கூறியிருந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக பெரியாரிய, இஸ்லாமிய அமைப்புகள் நேற்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி மீது புகார் அளித்தனர். மேலும் பாஜக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து துடியலூர் காவல்துறையினர் சுப்பிரமணி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் பாஜக-வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுப்பிரமணியை கைது செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மாட்டுக் கறி வீசும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தாபுதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நடந்து சென்ற ஆதித்தமிழர் கட்சியினர் பாஜக அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

அப்போது ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கண்டு சாலையில் மாட்டுக்கறியை வீசி எறிந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் படங்களை சாலையில் போட்டு மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாட்டுக்கறி எங்களது உரிமை, சுப்ரமணியை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி அவர்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: ஏசி அறையிலேயே பணியாற்றுபவரா நீங்கள்?

நீட் தேர்வை வைத்து திமுக மக்களை ஏமாற்றுகிறதா?

டாப் 10 நியூஸ் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் ரவியின் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : தால் வடா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share