nesha prabhu attack Police Inspector Waiting List

செய்தியாளர் மீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

அரசியல்

nesha prabhu attack Police Inspector Waiting List

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி செய்தியாளராக கடந்த 7 ஆண்டுகளாக நியூஸ் 7 சேனலில் பணியாற்றி வருபவர் நேசபிரபு.

அந்த பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வது குறித்து ஆதாரங்களை திரட்டி செய்தி வெளியிட்டு வந்துள்ளார்.

ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு வியாபாரியை மிரட்டி லஞ்சம் கேட்டது தொடர்பான செய்தியையும் அவர் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 24) நேசபிரபுவை அடையாளம் தெரியாத நபர்கள் கார் மற்றும் பைக்கில் பின்தொடர்ந்துள்ளனர். தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் நோட்டமிடுவதை அறிந்த நேசபிரபு இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதுதொடர்பான ஆடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்ட அவர், தன்னை வந்து காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதற்கு போலீசார் தரப்பில் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு தருமாறு கூறியிருக்கின்றனர்.

காமநாயக்கன்பாளையம் தலைமை காவலர் கண்ணனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த கும்பல் நேசபிரபுவை நெருங்கியுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த நேசபிரபு, அங்கிருக்கும் பெட்ரோல் பங்க் அருகே நின்றுள்ளார். அந்த கும்பல் தாக்க வந்ததும் பெட்ரோல் பங்கில் இருந்த அலுவலக அறைக்குள்  சென்று உள்பக்கமாக தாளிட்டு கொண்டுள்ளார்.

எனினும் அந்த கும்பல் வெளியே இழுத்து வந்து நேச பிரபுவை கடுமையாக வெட்டி தாக்கி சென்றுள்ளது. இதில் கை, கால், நெஞ்சு, தலை உள்ளிட்ட பகுதிகளில் நேசபிரபுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நேசபிரபு, கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு பலமுறை நேசபிரவு தகவல் கொடுத்தும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததற்கு, சென்னை பிரஸ் கிளப், சென்னை ஜர்னலிஸ்ட் யூனியன் மற்றும் பிற பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ப்ளூ ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம்!

செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!

nesha prabhu attack Police Inspector Waiting List

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *