டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி

Published On:

| By Selvam

சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த நிலையில், டெல்லி முதல்வர் பதவியை அதிஷி இன்று (பிப்ரவரி 9) ராஜினாமா செய்தார். Atishi submitting her resignation

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதல்வருமான அதிஷி 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அதிஷி, துணை நிலை ஆளுநர் வினேய் குமார் சக்சேனாவிடம் தனது ராஜினாவை சமர்ப்பித்தார். இதனையடுத்து அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இந்தசூழலில் , டெல்லியில் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுக்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். Atishi submitting her resignation

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share