டெல்லியின் முதல்வராக அதிஷி பதவியேற்கப்போகும் தேதியை ஆம் ஆத்மி கட்சி இன்று (செப்டம்பர் 19) அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னால் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 13-ஆம் தேதி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இதனை தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”சில மாதங்களில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. மக்கள் தங்களது தீர்ப்பை அறிவிக்கும் வரை நான் முதல்வர் நாற்காலியில் அமரமாட்டேன். அதனால் இன்னும் இரண்டு நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்” என கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
அவர் சொன்னபடியே கடந்த 17ஆம் தேதி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது அவருடன் சென்ற டெல்லி அமைச்சர் அதிஷி, தனது தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்தார்.
இந்த நிலையில் டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்கப்போகும் தேதியை ஆம் ஆத்மி கட்சி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி அதிஷியும், மற்ற அமைச்சர்களும் பதவி பிரமாணம் எடுக்கவுள்ளார்கள் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விசிக மாநாட்டுக்கு போட்டியாக பாமகவின் மாநாடு!
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… நகைப் பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு!
லெபனானில் பேஜரை தொடர்ந்து வெடித்த வாக்கி டாக்கிகள்… பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு!