டெல்லியின் முதல்வராக அதிஷி இன்று(செப்டம்பர் 21) பதவியேற்றார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 13-ஆம் தேதி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி கல்வித் துறை அமைச்சர் அதிஷி ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற கட்சி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கான கடிதத்தை டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவிடம் அதிஷி கடந்த 17ஆம் தேதி வழங்கினார். அதை ஆளுநர் சக்சேனா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கெசட்டில்(Gazette), டெல்லியின் முதல்வராக அதிஷியை நியமிப்பதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருப்பதாக நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணிக்கு ராஜ் நிவாஸில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, அதிஷிக்கு டெல்லி முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவருடன், சௌரப் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட், இம்ரான் ஹுஸைன், மற்றும் முகேஷ் குமாரும் டெல்லியின் அமைச்சர்களாகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதன் மூலம் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிஷி நியம்மிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அதிஷியும் இன்று பதவி பிரமாணம் எடுத்தக்கொண்ட மற்ற 5 அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதற்கிடையில் அதிஷி வெறும் பொம்மைதான், அவரை ஆட்டிவைப்பது முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று பாஜக இந்த பதவி ஏற்பு விழாவை விமர்சித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கெஜ்ரிவால் ராஜினாமா… ஆட்சியமைக்க உரிமை கோரினார் அதிஷி
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிர்ப்பு… மநீம பொதுக்குழுவில் தீர்மானம்!
”சகுனிகள் வாழும் சமூகத்தில் நியாயவாதியாக இருக்க கூடாது” – ரீசன் சொன்ன ரஜினி