பிரபல தாதாவுக்கு நேர்ந்த சோகம்: மூவர் கைது!

அரசியல் இந்தியா

உத்தரபிரதேச மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தாதாவுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் அத்திக் அகமது. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட 100-க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இவர் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

atiq ahmed brother ashraf killed shooter held

2005-ஆம் அண்டு பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அத்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர்.

atiq ahmed brother ashraf killed shooter held

இந்தநிலையில், நேற்று இரவு உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் எம்எல்என் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனைக்காக அத்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரை போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக்கொண்டிருந்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியில் சுட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்திக் அகமது கொலை வழக்கில் உத்தரபிரதேச காவல்துறை இதுவரை லவ்னேஷ் திவாரி, அருண் மெளரியா, சன்னி ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

அத்திக் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதால் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக அத்திக் அகமது மகன் ஆசாத் அகமதை உத்தரபிரதேச போலீஸ் என்கவுன்டர் செய்திருந்த நிலையில், அத்திக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

பணம் வசூலிப்பதே கல்லூரியின் நோக்கம்: நீதிமன்றம் அபராதம்!

திருப்பதி திவ்ய தரிசனம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *