asset case ponmudi appeal delay for supreme court holidays

உச்சநீதிமன்ற தொடர் விடுமுறை: பொன்முடி மேல்முறையீட்டில் தாமதமா?

அரசியல்

asset case ponmudi appeal delay for supreme court holidays

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை 2016-ஆம் ஆண்டு விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் டிசம்பர் 19-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,

சிறப்பு நீதிமன்ற விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து உத்தரவிட்டார். மேலும், தண்டனை விவரங்கள் இன்று (டிசம்பர் 21) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்

இந்த தீர்ப்பு பற்றி ஏன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன்,

“ இந்த தீர்ப்பு பொன்முடிக்கு கடுமையான பின்னடைவு தான். இருப்பினும் எங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று (டிசம்பர் 21) பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் நிலையில், உடனடியாக மேல்முறையீடு செய்வதற்காக உச்சநீதிமன்றம் செல்வதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன என்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.

”பொன்முடி வழக்கில் டிசம்பர் 19-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. தண்டனை விவரம் டிசம்பர் 21 அறிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில்,  டிசம்பர் 18 முதல் ஜனவரி 1 வரை உச்சநீதிமன்றத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கால விடுமுறை.

இந்த விடுமுறை காலங்களில் ரெகுலர் கோர்ட் எனப்படும் வழக்கமான அமர்வுகள் செயல்படாத சூழலில் விடுமுறை கால அமர்வுகள் மட்டுமே செயல்படும்.

அதனால் வழக்கமான வேகத்தோடு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்பது கடினமான விஷயமாக இருக்கிறது. மேலும், சுமார் இரு வார கால இந்த விடுமுறைக்கு இடையே டிசம்பர் 25 முதல் ஜனவரி 1 வரை  ஒரு வார காலம் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கும் விடுமுறை.

எனவே வேகமான சட்ட நடவடிக்கைகளுக்கு இந்த விடுமுறை காரணமாக ஒரு ஸ்பீடு பிரேக் இருக்க தான் செய்யும். அதையும் தாண்டி தான் எங்களது சட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜி.எஸ்.டி. படிவம்: 27-ம் தேதி வரை கால அவகாசம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

asset case ponmudi appeal delay for supreme court holidays

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *