கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருத்தியதால் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு அதிமுக சார்பாக இன்று (ஜூன் 24) கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள்ளக்குறிச்சியில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், அது குறித்து பேச அவையை ஒத்தி வைத்து அனுமதி அளிக்கவேண்டும் என்றும் அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர்.
மேலும், சட்டப்பேரவைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து பேரவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்வுகளையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘உழவர்களின் தோழன்’… சிவகார்த்திகேயனுக்கு புதிய விருது!
அரசு பள்ளிகளில் திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!