புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தில் இருக்கும் குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக ரயில்வே துறை 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை இன்று (நவம்பர் 28) அமைத்துள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில் பல குறைகள் இருப்பதாக அதை ஆய்வு செய்த பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌதரி தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விதிகளை மீறி மோசமாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் : சு.வெங்கடேசன் கண்டனம்! என்ற தலைப்பில் நமது மின்னம்பலம் தளத்தில் இன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “பாம்பன் பாலம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷ்னர் ஏ.எம். சௌத்ரி, நவம்பர் 26ஆம் தேதி அவர் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் பல குறைகள் இருப்பதாக கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தின் திட்டமிடலிலிருந்தே பல பிரச்சினைகள் உள்ளன. கட்டுமானத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த ரயில் பாலம் இப்போதே துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பல இடங்களில் உள்ள போல்ட்டுகள் தேவையான அளவை விட சிறியதாக இருக்கின்றன எனப் பல குறைபாடுகளை ஏ.எம் சௌத்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ” ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் ஏ.எம்.சௌதரி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.
பாம்பன் பாலத்தின் பாதுகாப்பு தன்மைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, தனது அறிக்கையை இந்த குழு ஒன்றரை மாதத்தில் சமர்ப்பிக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ” டிஒய்பிஎஸ்ஏ (TYPSA) என்ற சர்வதேச ஆலோசக நிறுவனம்தான் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை வடிவமைத்தது. ஐரோப்பிய மற்றும் இந்திய தரக்கட்டுபாடுகளுக்கு ஏற்ப பாலம் வடிவமைக்கப்பட்டது.
இந்த வடிவமைப்பைச் சென்னை ஐஐடியும், அதற்குப் பின் மும்பை ஐஐடியும் சரிபார்த்தன” என்று தென்னக ரயில்வேத்துறை விளக்கமளித்திருந்தது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ED சம்மனை எதிர்த்த வழக்கு : பொதுத் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு!
இசைவாணி, பா ரஞ்சித் மீது மேலும் 2 புகார்கள்!
இந்தியா வரவில்லையென்றால்… பிரம்மாஸ்திரதை கையில் எடுத்த பாகிஸ்தான்!