அசோக் நகர் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி சர்ச்சையாகியிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது 4 நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டிருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் மாணவர்கள் மனதில் பகுத்தறிவை விதைக்காமல், மூட நம்பிக்கையை விதைப்பதா என அசோக் நகர் அரசு பள்ளி முன்பு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் இன்று (செப்டம்பர் 6) காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர், “ஊக்கமூட்டும் வகையில் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது, ஆன்மீகம் என்ற வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. பள்ளியின் மேலாண்மை குழு சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்.
எனினும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து செல்லவில்லை.
இந்நிலையில் அங்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது போன்ற நிகழ்வுகள் அரசு பள்ளியில் நடக்கக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது 3, 4 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அமெரிக்கா வரை எதிரொலித்த அசோக் நகர் பள்ளி விவகாரம்… ஸ்டாலின் பதில்!
பாவ, புண்ணிய வகுப்பு… ஆசிரியரிடம் ஆணவப் பேச்சு : அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது?