Asaduddin Owaisi confirmed Alliance with AIADMK till 2026

”2026 தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி” : ஒவைசி சொன்ன காரணம் தெரியுமா?

அரசியல்

வரும் 2026 சட்டபேரவைத் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

அதிமுக, திமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவும் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் களத்தில் சூடுபிடித்துள்ளன.

இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி இன்று (ஏப்ரல் 13) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்துள்ள அதிமுக, எதிர்காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளது.

மேலும், சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சியை எதிர்ப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது.

எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏஐஎம்ஐஎம் ஆதரவு அளிக்கும். அதேபோல், 2026 சட்டசபை தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்” என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் வந்திருந்தபோது, ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது நேரில் சந்தித்தார்.

எனினும் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுடன், 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் ஒவைசி ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மைதான் : விமர்சனம்!

”அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை வேண்டாம்” : சிதம்பரத்தில் சீறிய எடப்பாடி

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *