'As long as there was an artist, no one could follow him' - Prakash Raj

“குமரியில் மோடி போட்டோஷூட்” – பிரகாஷ்ராஜ் தாக்கு!

அரசியல்

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (ஜூன் 1) திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், “நான் அதிக படப்பிடிப்புகளை பார்த்துள்ளேன். அதற்கெல்லாம் மக்கள் வருவார்கள். ஆனால், கன்னியாகுமரியில் தற்போது நடைபெறும் படப்பிடிப்பிற்கு மோடியே பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்.

‘இருவர்’ திரைப்படத்தில் தமிழ்செல்வன் என்ற கதாபாத்திரம் கலைஞரை தழுவி எடுக்கப்பட்டது. அதில் படத்திற்கு தேவையானவற்றை நான் செய்தேன்.

ஆனால், இதை விடுத்து, கதாபாத்திரம், சினிமா என அனைத்தையும் தாண்டி கலைஞர் என்ற ஓர் அற்புதமான மனிதரை நம்மால் தற்போது புரிந்துகொள்ள முடிகிறது.

கலைஞராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை. கல்லக்குடி போராட்ட காட்சியில் நடித்த போது எனக்கு வியர்த்து விட்டது. கலைஞர் ஒரு பன்முக தன்மையாளர்.

என் வசனத்தை பேச சிவாஜிக்கு பிறகு பிரகாஷ்ராஜ் இருக்கிறார் என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். கலைஞர் விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது.

கலைஞர் கொள்கையை வைத்து அரசியல் செய்தவர். அவரின் உயரம் என்பது, அவரால் உயர்ந்து நிற்பவர்களின் உயரத்தில் இருக்கிறது.

கலைஞரின் எழுத்துகளுக்கான வாரிசு இனிதான் பிறக்க வேண்டும். ஏனெனில், கலைஞரின் எழுத்துகள் அனைத்தும் அத்தனை அருமையாக இருக்கும்.

கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் வந்திருக்காது. அவர் இருக்கும் வரை யாராலும் வாலாட்ட முடியவில்லை. சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல. கொள்கை பற்றால் தலைவரானவர் கலைஞர்.

அரசியலில் எப்போதும் எதிர்க்கட்சி தோற்காது, ஆளும் கட்சி தான் தோற்கும். அந்த வகையில், இந்த முறை பாஜக தோற்பதற்கு மோடி வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இறுதிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் – 1 மணி நிலவரம்!

ஹன்சிகாவின் ‘காந்தாரி’ படம் எப்போது ரிலீஸ்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0