அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனிற்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 21) உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர், கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேம்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மே 10ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், ஜூன் 2ஆம் தேதி மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் ஜூன் 2ஆம் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த ஜாமீன் மனு நேற்றுவிடுமுறை கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியும், ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதிர்குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர துடேஜா அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க விஜய் உத்தரவு!
இந்தியா வரும் இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம்: BCCI அட்டவணை வெளியீடு!