டெல்லி தேர்தல்… கெஜ்ரிவால் தொகுதியில் கடும் இழுபறி!

Published On:

| By Selvam

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 8) காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி பின்னடைவை சந்தித்தனர். Arvind Kejriwal trial New Delhi

இரண்டாவது சுற்று முடிவில், 4,679 வாக்குகள் பெற்று 254 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் முன்னிலைக்கு வந்தார்.

இந்தநிலையில், தற்போதைய நிலவரப்படி 8-ஆவது சுற்று முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் 16,903 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 16,473  வாக்குகள் பெற்று 430 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி தொடர் பின்னடைவை சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 21,519 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிஷி 18,719 வாக்குகள் பெற்று 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share