பாஜக என்னை கைது செய்யும் முடிவில் இருக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். bjp is planning to arrest me
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
முதலில் கடந்த நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால் அவர் ஆஜராகாததால் ஜனவரி 3ஆம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேற்றும் ஆஜராகவில்லை.
மூன்று முறையும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலை இன்று கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதோடு, கெஜ்ரிவால் தொடர்புடைய இடங்களில் இன்று ED சோதனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் டெல்லி முதல்வர் இல்லம் முன்பும், ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தசூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “இந்த விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை அமலாக்கத் துறை எதையும் கண்டுபிடிக்கவில்லை. யாருக்கு எதிராகவும் எந்த ஆதாரமும் விசாரணை அமைப்பிடம் இல்லை.
எனது நேர்மைதான் எனது பலம். பாஜக என்னைக் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறது. பொய் வழக்குகள் மற்றும் சட்டவிரோதமாக சம்மன்கள் அனுப்புவதன் மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்புகிறார்கள்.
பாஜகவின் நோக்கம் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. மக்களவை தேர்தலில் எனது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். அதுவே அவர்களது நோக்கம்.
அமலாக்கத் துறை எனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமாக இருப்பதாக எனது வழக்கறிஞர்கள் கூறினார்கள். இந்தியாவுக்காக என் இதயம் துடிக்கிறது. பாஜகவை எதிர்த்து போராட உங்களின் ஆதரவு தேவை” என்று கூறினார்.
அதேசமயம், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் ரெய்டு நடப்பதாக வெளியான தகவலை அமலாக்க இயக்குனரகம் நிராகரித்துள்ளது.
நான்காவது முறையாக சம்மன் அனுப்ப அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தாயான அமலா பால்: வைரல் போட்டோ!
கிண்டல் செய்த கேப்டனுக்கு… பிளாஷ்பேக்கை வைத்து பதிலடி கொடுத்த கோலி!
bjp is planning to arrest me