அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ஆம் தேதி திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார்.
இந்தநிலையில், மதுபான ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விடுமுறைக்கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிர் குமார் ஜெயின், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்தார். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்தநிலையில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்க்கு வாழ்த்து சொன்ன த்ரிஷா… ட்ரெண்டான செல்ஃபி!
நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் அவதூறு… டிஜிபிக்கு நோட்டீஸ்!