டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

Published On:

| By Selvam

புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 8) தோல்வியடைந்தார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. arvind kejriwal lost delhi

பாஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.

புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவை சந்தித்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதும், பின்னடைவை சந்திப்பதுமாக இருந்தார்.

இறுதியில், 14-வது சுற்று முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், தோல்வி அடைந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் தோல்வி தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்!

தோல்வியை அடுத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜகவை வாழ்த்துகிறேன். மேலும் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்புத் துறையில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், மக்களிடையே இருந்து அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்” என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

arvind kejriwal lost delhi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share