“மணிஷ் சிசோடியா கைது கேவலமான அரசியல்”: அரவிந்த் கெஜ்ரிவால்

அரசியல்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது கேவலமான அரசியலாகும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 26) ஆஜரான மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரது கைதை கண்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

அதில், “மணிஷ் சிசோடியா அப்பாவி. அவரை கைது செய்துள்ளது ஒரு கேவலமான அரசியலாகும். மணிஷ் கைது செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு தக்க பதிலளிப்பார்கள். மணிஷ் சிசோடியாவின் கைது எங்களது போராட்டத்தை வலுவடையச் செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

“ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும்”: கிருஷ்ணன் உண்ணி

டிராவிட் வேண்டாம்: பயிற்சியாளரில் மாற்றம் வேண்டும்…ஹர்பஜன் சிங் கோரிக்கை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0