தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்!

அரசியல்

இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

அண்மையில் விஆர்எஸ் பெற்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. மேலும் இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் சட்டமன்ற தேர்தலையடுத்து, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

அடுத்த தேர்தலில் போட்டியா: முடிவுசெய்த முன்னாள் முதல்வர்!

ராகுல் காந்திக்கு மிரட்டல் கடிதம்: 2 பேர் கைது!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0