விஜய் மாநாடு… தொகுதிக்கு எத்தனை பேர்? மொத்த டார்கெட் எவ்வளவு?

அரசியல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நாளை அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கிறது.

இதை ஒட்டி தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் விழுப்புரம் மாவட்டத்தை நோக்கி புறப்பட்டிருக்கிறார்கள் விஜய் கட்சியினர். இந்த மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொகுதிக்கு எத்தனை பேர்…

மாநாட்டுக்காக ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எத்தனை பேர் வரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி மாநாடு நடக்கும் இடம்  தமிழ்நாட்டின் வட பகுதி என்பதால்… இதன் அருகே உள்ள வட மாவட்டங்களில் இருந்து ஒரு தொகுதிக்கு  ஆயிரம் முதல் 1,500 பேர் வரை வர வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதேபோல  தென்மாவட்டங்களில் இருந்து ஒரு தொகுதிக்கு 250 முதல் 500 பேர் வரை வரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தென் மாவட்டத்தில் 58 தொகுதிகள் இருக்கின்றன. அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் வரக் கூடும்.  வட மாவட்டங்கள், டெல்டாவில் இருந்து ஒரு லட்த்துக்கும் மேற்பட்டவர்கள் திரள்வார்கள்  என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.  மேற்கு மாவட்டங்களையும் சேர்த்தால் மொத்தக் கூட்டம்  இரண்டு லட்சத்தைத் தொடும் என்பது தவெக தலைமையின் கணக்கு.

 எத்தனை நாற்காலிகள்… போலீஸ் சொன்ன யோசனை!

மாநாட்டுத் திடலில்  50 ஆயிரம்  நாற்காலிகள்  போடப்பட்டுள்ளன. அதாவது மைதானத்தை முதலில் 60 பாக்ஸுகளாக பிரித்திருந்தார்கள். போலீசாரின் ஆலோசனைப்படி மேலும் 40 பாக்ஸுகள் என மொத்தம் 100 பாக்ஸுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பாக்ஸ் பகுதிக்குள் நாற்காலியில் சுமார் 600 பேர் அமர முடியும்.  மற்றவர்கள் பிறபகுதிகளில் நிற்க முடியும்.  ஃப்ளோட்டிங் பீப்பிள் என்ற வகையில் கூட்டத்தின் ஒரு பகுதி நகர்ந்துகொண்டே இருப்பதால் இதில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திய ராணுவம் தீவிரவாதக்குழு – சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு கிளம்பிய எதிர்ப்பு!

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியுதவி… மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *