கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 6) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று (ஜூலை 5) கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அனுமதி அளித்தார். இதனையடுத்து நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் நாளை காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கும் வரை அவரது உடலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து வாங்க மாட்டோம் என்று கட்சி நிர்வாகிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மூன்று சட்டங்களே மோடி ஆட்சியை மாற்றும்”: உண்ணாவிரதத்தில் ஆ.ராசா ஆவேசம்!