இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தலைவர் அர்ஜூன மூர்த்தி இன்று ஆகஸ்ட் 22-ம் தேதி பாஜகவில் இணைந்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் அறிவு சார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் அர்ஜூன மூர்த்தி.
அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்தார். அவர் ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால், நடிகர் ரஜினி தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, அர்ஜூன மூர்த்தி ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதுக்கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில், அவர் இன்று ஆகஸ்ட் 22-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று தன்னை பாஜகவில் இணைத்துகொண்டார்.
செல்வம்
பல்கலைத் தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக தலைவருக்காக எழுதியவர் கைது!
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி அப்படின்னு ஒன்னு இருந்ததா? இவர் சேர்ந்ததால் ரசிகர்கள் போய்விட மாட்டார்கள்.