ஆ. ராசா உருவ பொம்மை எரிக்க முயற்சி!

Published On:

| By Jegadeesh

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசாவை கண்டித்து அர்ஜூன் சம்பத் தலைமையில் இன்று (செப்டம்பர் 25 )இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், டிவி,மின் விசிறிகள் உடைக்கப்பட்டு மின்தடை மற்றும் மின் கட்டணத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஆ.ராசா எம்.பி பேசியதாக கூறி அவரது உருவப் படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

Arjun Sampath protest

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தமிழகம் முழுவதும் ஒருவர்கூட கைது செய்யப்படாததை கண்டித்து காவல்துறைக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.

மேலும், ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத் ’என்.ஐ.ஏ – கைது நடடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை எனவும் ஆனால், விடுதலை சிறுத்தைகள் , நாம் தமிழர் போன்ற கட்சிகள் என்.ஐ.ஏ சோதனையை எதிர்க்கின்றனர் என்றும் கூறினார்.

Arjun Sampath protest

இந்து முஸ்லீம் மோதலை உருவாக்கும் நோக்கில் எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ செயல்பாட்டை முறியடித்துள்ளோம் எனவும் மேலும் இந்து மற்றும் முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் கூறினார்.

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அமித்ஷா மற்றும் மோடி நேரடியாக தலையிட்டு முதல்வரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உடுமலை கெளசல்யாவின் புது பிசினஸ்: தொடங்கி வைத்த நடிகை!

தனுஷ் உதவி…நன்றி சொன்ன போண்டா மணி

Comments are closed.