தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு இருந்து வந்தார். தற்போது அவர் கால்நடைத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார் . அவர் வகித்த பொறுப்புக்கு அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவைச் சேர்ந்த 2002 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் தற்போது தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
தற்போது புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதோடு, தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற 2026 தேர்தலை நடத்தும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவராகவும் அர்ச்சனா பட்நாயக் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…