அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதி , தேர்தல் ஆணையம் சீலிட்ட அறிக்கை ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
அதிமுக தற்போது இரு அணிகளாகப் பிரிந்துள்ளது. மறுபக்கம் சசிகலா நான் தான் அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறி வருகிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகிறது.
அதிமுக யார் கைக்குப் போகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இன்று தேர்தல் ஆணையம் சீலிட்ட அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.
2021-2022ஆம் ஆண்டுக்கான அதிமுகவின் வரவு செலவு கணக்கை எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது.
இதுதொடர்பான அறிக்கை தற்போது வைரலாகி வரும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பிரியா
பரவும் கொரோனா : ராகுல் யாத்திரைக்கு தடை?
அதிமுகவில் இடைச்செருகல்களை நீக்க வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்