new district secretaries in AIADMK

அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!

அரசியல்

அதிமுகவுக்கு புதிதாக 5 மாவட்டச் செயலாளர்களை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தைதொடர்ந்து அதிமுகவுக்குள்ளும் அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.  புதிதாக 5 மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார்.

அதன்படி, கன்னியாகுமரி கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ராம ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திருநெல்வேலி என செயல்பட்டு வந்த மாவட்டக் கழக அமைப்புகளும் பிரிக்கப்பட்டு, அவை சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்று அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு : நீதிபதி உத்தரவு!

திருமாவளவனுக்கு அதிமுக தூதா?: வைகோ பதில்!

+1
1
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *