நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் ஏன் தெரியுமா? – அண்ணாமலை

அரசியல்

பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று சொன்னது தவறு இல்லை, அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபிறகு பேசிய அண்ணாமலையிடம், பாஜக தலைவர் ஆனபிறகு அடிக்கடி கோவப்படுவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, சிலர் வரம்பு மீறும்போது கோவப்படுகிறோம். சில கோவத்திற்கு காரணம் இருக்கிறது. அது தவறு கிடையாது. சில இடத்தில் பத்திரிக்கையாளர்களும் கோவப்படுகிறீர்கள்.

தேவையில்லாமல் யாரும் கோவப்படவில்லை. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பல நேரம் பொறுமையாக தான் பதில் சொல்லுகிறோம். பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று சொல்லவில்லை. குரங்கு போல ஏன் தாவி தாவி வருகிறீர்கள் என்று தான் சொன்னேன்.

எனவே இரண்டும் ஒன்று கிடையாது. புலி மாதிரி பாய்ந்து வருகிறீர்கள் என்று சொன்னால் நீங்கள் புலியாகிவிட மாட்டீர்கள்.

இது அனைத்துமே உவமை தான் என்றார். அப்போது ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை பார்த்து ஆயிரம், இரண்டாயிரம் என்று ஏலம் விட்டது சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் கூறிய பத்திரிக்கையாளரை பற்றி நன்கு அறிந்துதான் அப்படி சொன்னேன். அனைவரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றார்.

சன்டிவி, கலைஞர் டிவி, முரசொலி நடுநிலையோடு செயல்படுகிறது என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, அப்படி கட்சி சார்ந்து நடந்துகொள்ளும் பத்திரிக்கையாளர்கள் மீது கோவம் வருவது நியாயம் தான் என்றார்.

பத்திரிக்கையாளர்கள் சமமாக நடந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.பாரதி கருத்தை ஒருமாதிரியும், அண்ணாமலை கருத்தை ஒருமாதிரியும் திரித்துக் கூறாதீர்கள் என்றார்.

பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியதற்கு, நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன், நான் தவறு செய்யவில்லை, என் ரத்தத்திலேயே அது கிடையாது, என் செய்தியை எடுத்துக்கொள்வதும், நிராகரிப்பதும் உங்கள் விருப்பம் என்று அண்ணாமலை ஆவேசமாகப் பேசினார்.

கலை.ரா

பால்ரஸ் குண்டு, ஆணிகளை காண்பித்து அண்ணாமலை கேள்வி?

குஜராத் பாலம் விபத்து: குடும்ப உறுப்பினர்களை இழந்த பாஜக எம்.பி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *