நாடாளுமன்ற தேர்தலுடன் ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இன்று (டிசம்பர் 11) வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என சிறப்பு அந்தஸ்து ஏதும் கிடையாது என்றும் 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ஏதும் கிடையாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். காஷ்மீரும் இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் உறவு கடந்த 75 ஆண்டுகளாக சீரடையாமல் உள்ளது.
மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் நிலையற்ற பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. இந்தசூழலில் காஷ்மீரில் ஜனநாயக ரீதியிலான ஓர் அரசு அமைய வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். அதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீருக்கு தேர்தல் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வெள்ளத்தில் பழுதான வாகனங்கள்: உதவி எண்கள் அறிவிப்பு!