அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று (ஆகஸ்ட் 4) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின்போது கட்சியிலிருந்து கடந்த 2021-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி அன்வர் ராஜா எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, “எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சி பணியாற்றி வந்தேன். ஒரு சிறிய சறுக்கலுக்கு பிறகு மீண்டும் என்னை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைத்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். ஒரு கட்சியை விமர்சிப்பது வேறு. கூட்டணி என்பது வேறு.
இன்றைக்கும் பாஜக தலைவர்கள் அதிமுகவை விமர்சிக்கிறார்கள். ஆனால் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது கட்சி தலைவர்கள் தான். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை தவிர பாஜகவுடன் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுடன் திமுகவும் கூட்டணி அமைத்தது.
எங்கள் கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்படுமானால் உடனடியாக கூட்டணியிலிருந்தும் அதிமுக விலக தயங்கியதில்லை. ஜெயலலிதா டெல்லிக்கு சென்று 10 நாட்கள் தங்கியிருந்து பாஜக அரசை கவிழ்த்து விட்டு தான் தமிழகம் திரும்பினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோதும் அதிமுகவினர் இல்ல நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து கலந்து கொண்டேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
பிரிக்ஸ் உச்சிமாநாடு: பிரதமா் மோடி பங்கேற்கிறார்!
“டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா” – அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!