உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் : மத்திய அமைச்சர்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நேற்று (செப்டம்பர் 2) சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியிருந்தார்.
இது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி மீது வழக்கறிஞரும் சமூக சேவகருமான வினித் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் புகார் அளித்தார்.

அதுபோன்று உதயநிதியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டு என்று கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி ஒரு திமிர் பிடித்த கூட்டணி என்று கூறியுள்ள அனுராக் தாகூர், “ஊழல்வாதிகளின் இந்த கூட்டணி பாரதத்தையும் அதன் கலாச்சாரத்தையும், தேசத்தைப் பல ஆண்டுகளாக இணைக்கும் சனாதன தர்மத்தையும் வெறுப்பதை நிறுத்தவில்லை.

திமுகவோ அல்லது இந்த திமிர்பிடித்த கூட்டணியில் இருக்கும் வேறு எந்த கட்சியோ இந்துக்கள் மீதும், சனாதன தர்மத்தின் மீதும் வெறுப்பை வளர்த்து, அதை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு சனாதன தர்மத்தை ஒழிக்க மற்றவர்களைத் தூண்டிவிடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இந்த கூட்டணி ஆளும் மாநிலங்களில் இதுபோன்று தான் நடந்துகொள்கின்றனர். மேற்கு வங்கத்தில், ராம நவமி கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பிகாரில் சீதா தேவி மற்றும் ராமாயணத்திற்கு எதிராகப் பேசினர். தற்போது சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுகின்றனர்.

உதயநிதியின் கருத்தைக் கூட்டணியில் உள்ள யாரும் எதிர்க்கவில்லை. உங்கள் அரசின் சாதனைகளை வெளிகாட்டிகொள்ள ஒன்றும் செய்யவில்லை. இந்த கூட்டணிக்குத் தலைவரைத் தேர்வு செய்ய முடியவில்லை.

ஆனால் சமூகத்தை பிளவுபடுத்தும் அளவுக்குக் கீழ்த்தரமாக செயல்படுகிறீர்கள். உதயநிதி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பிரியா

நெல்லை : திருமணத்துக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!

ரஜினிக்கு ஆளுநர் பதவியா? அண்ணன் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel