தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் நான்கு பேருக்கும் தனித்தனியே துறைகள் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் அனு ஜார்ஜ்க்கு 12 துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அனு ஜார்ஜ் ஐஏஎஸ் விடுப்பில் சென்றார். சொந்த காரணங்களுக்காக அவர் விடுப்பில் சென்றதாகக் கூறப்பட்டது.
அனு ஜார்ஜ் விடுப்பில் சென்றதால் அவர் வசம் இருந்த 12 துறைகளும் உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

இந்தச்சூழலில் 75 நாட்களுக்கும் மேலாக விடுப்பிலிருந்த அவர் இன்று (ஏப்ரல் 6) மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இதனால் ஏற்கனவே அவர் கவனித்து வந்த 12 துறைகளும் மீண்டும் அவருக்கே ஒதுக்கி அரசாரணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுற்றுச்சூழல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலம், கால்நடை, மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட 12 துறைகளை மீண்டும் அனு ஜார்ஜ் கவனிக்க உள்ளார்.
பிரியா