தாம்பரம் – நாகர்கோயில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தாம்பரம் – நாகர்கோயில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக அங்கிருந்து புறப்படும் அல்லது செல்லும் ரயில் சேவைகளை ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை 9 நாட்களுக்கு பல மாற்றங்கள் செய்து தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
முழுவதும் ரத்து!
அதன்படி, தாம்பரம் – நாகர்கோயில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து செய்யப்படும் ரயில்கள்!
எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோர்ட் ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
தாம்பரம் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்
காரைக்குடியில் இருந்து எழும்பூர் வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது தாம்பரத்தை கடந்து செல்லும் 26 ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது!
குழந்தைக்கு பெயர்சூட்டிய அண்ணாமலை… ஷாக் ஆன பாஜகவினர்!