Anti-alcohol protests held by PMK! Listed by Ramadoss

பா.ம.க நடத்திய மது ஒழிப்பு போராட்டங்கள்! பட்டியல் போட்ட ராமதாஸ்

அரசியல்

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி விசிக சார்பில் உளுந்தூர் பேட்டையில் மது, போதை பொருள் ஒழிப்பு மாநாடு அறிவித்து அதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறார் திருமாவளவன். இந்த மாநாட்டில் பாஜக, பாமக தவிர அனைவரும் கலந்துகொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாமக நடத்திய மது ஒழிப்புப் போராட்டங்கள் எவ்வளவு தெரியுமா என்று பட்டியல் போட்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 20) தனது சமூகதளப் பக்கத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ள டாக்டர் ராமதாஸ்,

“மதுவிலக்கு என்றால் அது பா.ம.க. தான். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் பா.ம.க. எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை கடந்த காலங்களில் நானும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய போராட்டங்களே சாட்சி. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்: அன்புமணி ராமதாஸ்  பேச்சு | ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம் ...

அதில் அவர், “பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே 1984 ஆம் ஆண்டில் மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நான் நடத்தினேன்.

1989 ஆம் ஆண்டில் பா.ம.க. தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2ஆவது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.

01.11.1989 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மதுவிலக்கு கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம். 12.10.1995 பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது, ஆபாச ஒழிப்பு மாநாட்டை நான் நடத்தினேன்.

27.12.2001 அன்று, தமிழக அரசு அறிமுகப்படுத்திய மலிவு விலை மதுவை ஒழிக்கக் கோரி தலைமைச் செயலகத்துக்கு எதிரில் கருப்பு உடை அணிந்து எனது தலைமையில் ஒப்பாரி போராட்டம்.

 

29.08.2003 அன்று திண்டுக்கலில் மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் போராட்டம். 2004 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பா.ம.க. மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற போது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

02.03.2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம். 08.03.2007 அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்.

10. 15.05.2007 அன்று தமிழகத்தில் மதுவின் தீமைகளை வலியுறுத்தியும், மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து விளக்கவும் பரப்புரை ஊர்தி பயணத்தை சென்னையில் நான் தொடங்கி வைத்தேன்.

17.08.2008 அன்று திருச்சியில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு. 18.08.2008 அன்று திருவண்ணாமலையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன” என்று 56 நிகழ்வுகளை பட்டியலிட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

சம்பளத்துக்காக அடித்துக் கொள்கிறார்களா குக் வித் கோமாளிகள்?

’320 ரூபாய்க்கு ஒரு கிலோ நெய்’: திருப்பதி தேவஸ்தான அதிகாரி எழுப்பிய புது சர்ச்சை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *