விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக அன்னியூர் சிவா இன்று (ஜூலை 16) பதவி ஏற்றார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 56,296 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை தோற்கடித்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தனது அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அன்னியூர் சிவாவுக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
“சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பெற்ற அன்னியூர் சிவா என்கிற சிவ சண்முகம் எனும் நான் இந்திய அரசியலைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும் பற்றையும் கொண்டிருப்பேன். நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன்” என கூறி அன்னியூர் சிவா பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி,
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்னியூர் சிவா, “வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காத மக்களுக்கும் அடிப்படை தேவைகளை செய்து தருவேன்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மதுரையில் பயங்கரம் : அமைச்சர் வீட்டருகே நாதக நிர்வாகி கொலை!
யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மீது வழக்குப்பதிவு: காரணம் என்ன?