சென்னையில் போலீஸ் கூறிய பாதையை தவிர்த்து மாற்றுப்பாதையில் சென்ற இந்து முன்னணி தலைவர் முருகானந்தம், தமிழக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 27 பேர் இன்று (செப்டம்பர் 4) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுவதை முன்னிட்டு மாநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
சிலைகள் கரைப்பதில் பிரச்சனைகள் ஏற்பட கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள், நடைமுறை விதிகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் போன்றவை போலீசார் தரப்பில் முன்னதாக அறிவுறுத்தப்பட்டன.
அதன்படி சிலைகளை கரைப்பதற்கு எடுத்துச் செல்லும் போது, மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் காவல்துறை அனுமதி வழங்கிய பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், பாலவாக்கம், பட்டிணப்பாக்கம், ஸ்ரீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதியும் அளிக்கப்பட்டது.
தடையை மீறிய இந்து முன்னணியினர் கைது!
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் ரத்னா கஃபே சந்திப்பில் விநாயகர் சிலையை இந்து முன்னணி தலைவர் முருகானந்தம், தமிழக பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் தடையை மீறி கொண்டு சென்றனர்.
மாற்றுப் பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும், அதனை மீறி செல்ல முயன்ற இருவரும் போலீசாருடன் தகராறிலும் ஈடுபட்டனர்.
மேலும் அவர்களுடன் வந்த இந்து முன்னணியினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் முருகானந்தம், அண்ணாமலையின் வலதுகரமாக இருக்கும் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோருடன் இந்து முன்னணி மற்றும் பாஜகவைச் சேர்ந்த 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: மோடி சர்வே- முருகனுக்கு புது அசைன்மென்ட்: தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?
வடக்கன் கொண்டாடும் விழாவை தமிழன் கொண்டாடுகிறான் ஆனால் தமிழர் பண்டிகையான தைப்பூசம், பொங்கல் போன்ற விழாக்களை அவன் தமிழகத்தில் இருந்தும் அவன் கொண்டாடுவதில்லை. புரிந்துகொள்ள வேண்டும்.
கலவரம் பண்ண ஒரு கூட்டம் இருக்கு ஆனால் அவன் இம்மாதிரியான ஊர்வலத்தில் கலந்து கொள்ளுவதில்லை.