அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பாஜகவின் 50 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
தற்போது கடைசி கட்டமாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் அவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருப்பத்தூர்-புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் வரும் அண்ணாமலையை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள், ராட்சத கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அங்கு பாஜகவினர் திரண்டிருந்த நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர அக்கட்சியின் இரும்பு கொடிக் கம்பம் ஒன்று சாலையில் நின்ற கலீல் என்பவர் தலையில் விழுந்தது.
இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கலீலுக்கு 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா