பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாள் இன்று. அவருக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 1939 ஆம் ஆண்டு பிறந்தார். இன்று (ஜூலை 25) தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக பாமக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் ஐயா அவர்களின் 84வது பிறந்த தினமான இன்று, அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர பாஜக சார்பாக வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரியா