தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 3) கோவையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உங்களையும், வானதி சீனிவாசனையும் சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்களே என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நாங்கள் இருவரும் எப்போதும் காமெடி செய்து பேசிக்கொண்டிருப்போம். அது இயற்கை. ஒரு அரங்கத்திற்குள் உட்கார்ந்து பேசினாலும், கட்சி அலுவலகத்தில் உட்கார்ந்து பேசினாலும் இப்படித் தான் பேசுவோம்.
காரணம் ஒரு பரஸ்பரமான நட்பு எங்களிடம் இருக்கிறது. வெளியே என்ன வேண்டுமானாலும் 1008 விஷயங்கள் பேசலாம். வானதி அம்மா என்று அவரை அழைப்பதில்லை, அக்கா என்று தான் அழைப்பேன்” என அண்ணாமலை தெரிவித்தார்
அப்போது குறுக்கிட்ட வானதி சீனிவாசன், “இருவரும் ரொம்ப இயல்பா இருக்கோம். ஒரு வீட்ல அக்கா, தம்பி உக்கார்ந்து பேசுனா எப்படி ஜோவியலா இருக்குமோ அதே மாதிரி எங்களுக்குள்ள ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் நடிக்க தெரியாது. இப்போம் எல்லோரும் என் முகத்தில் தான் கேமராவை ஃபோகஸ் பண்ணுறீங்க” என்று சிரித்துக்கொண்டே பேசினார். இதனால் செய்தியாளர் சந்திப்பில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரடியாக மோதுவது இந்நாள் முன்னாள்…நீலகிரியில் தகிக்கிறது அரசியல் அனல்!
ஆட்டை கொடுமைப்படுத்தாமல் பிரியாணி போடுங்கள்: டிஆர்பி ராஜாவுக்கு அண்ணாமலை பதிலடி!
ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொழுது ஆண் பெண் வித்தியாசமில்லாமல் பழகுவது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கமே! அந்த நட்பினால் எந்த தவறான எண்ணங்களும் இருவரிடையே தோன்றாது. ஆனால் அந்த நட்பு ஒரு கோட்டுக்குள் இருக்கும். இன்று பாய்ஃபரண்ட்ஸ, கேர்ள் ஃபரண்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டு வாடா, போடா என்று ஒருவர் தோளில் மற்றொருவர் கை போட்டு, இதென்ன உறவு என்ற சந்தேகத்தை எழுப்பாது. உண்மையில் ஆணும் பெண்ணும் நெருங்கி பழகி விட்டால்
தவறான எண்ணங்கள் அவர்களுக்குள் தோன்ற மனம் இடம் தராது. நட்பின் இலக்கணம்
மாறாது. ஆண் என்ன , பெண் என்ன எல்லாம் ஓரினம் தான் ….