தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை வரும் ஏப்ரல் மாதம் நடைபயணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இதை பற்றிய குறிப்பு பாஜக எதிர்கால நிகழ்ச்சிகளின் திட்டங்களில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று(ஜனவரி 20 ) கடலூரில் நடைபெற்றது. அதில் முதலமைச்சரை கண்டித்தும், பாஜக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி நட்டாவிற்கு பாராட்டு தெரிவித்தும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் வருங்கால திட்டங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் யாத்திரை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி ஏப்ரல் 14 ம் தேதி திருச்செந்தூரில் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார்.

அவரது இந்த யாத்திரைக்கு பிரம்மாஸ்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், அவருடன் 600 இளைஞர்கள் நடக்கிறார்கள். பல மத்திய அமைச்சர்களும் உடன் நடக்க உள்ளனர். ஸ்மிரிதி இராணி 100 கிலோ மீட்டர் நடக்க உள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தஞ்சாவூரிலும் வானதி சீனிவாசன் கோயம்புத்தூரிலும் அண்ணாமலையுடன் இந்த நடைபயணத்தில் இணைகின்றனர்.
பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் அண்ணாமலையுடன் மாவட்ட தலைநகரங்களில் இணைந்து நடக்க உள்ளனர் மேலும் உரை நிகழ்த்துகின்றனர்.
இந்த நடைபயணம் சென்னை கோபாலபுரத்தில் முடிவடைகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியா? – ஓபிஎஸ் வைத்திருக்கும் திட்டம்!
பாலியல் சீண்டலில் பாஜக எம்.பி… 3வது நாளாக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்… நடந்தது என்ன?