விஜய் – திரிஷாவை விமான நிலையத்தில் போட்டோ எடுத்தது யார்? – மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Published On:

| By Selvam

கோவாவுக்கு விமானத்தில் சென்ற விஜய்யின் பிரைவேட் போட்டோ லீக் ஆனது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் எழுதப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 19) தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கடந்த வாரம் கோவாவில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்காக, சென்னை விமான நிலையத்தில் கேட் நம்பர் 6-ல் சோதனைக்கூடத்தில் தன்னை உட்படுத்திக்கொண்டு தனியார் விமானத்தில் விஜய் சென்றார்.

அவருடைய பிரைவேட் போட்டோ எப்படி வெளியே வந்தது? விஜய் யாருடன் வேண்டுமானாலும் விமானத்தில் செல்லலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

விஜய் விமானத்தில் சென்றபோது அவரை யார் போட்டோ எடுத்தார்கள் என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

விமானத்தில் செல்கிறவர்களின் போட்டோவை எடுத்து திமுக ஐடி-விங்கிற்கு கொடுப்பது தான் மாநில உளவுத்துறையின் வேலையா? ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. இதுதான் உங்களது அரசியல் நாகரிகமா?

அதனால் தான் இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு பாஜக சார்பில் கடிதம் எழுத இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஷா இறுதி ஊர்வலம்… பாஜக நடத்தும் பதிலடி பேரணி: கோவையில் பரபரப்பு!

விண்வெளி நாயகா… ‘THUG LIFE’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share