annamalai says udhayanidhi stalin shooting relief work
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீட்பு பணியில் ஈடுபட்டது ஷூட்டிங்கில் இருப்பது போல் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 19) விமர்சித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்ககோரி இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மாரிசெல்வராஜ் கோரிக்கையை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தனர்.
அப்போது அவர்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்தநிலையில், இயக்குனர் மாரி செல்வராஜூடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் மீட்பு பணியில் ஈடுபட்டது ஷூட்டிங்கில் இருப்பது போல் உள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதைக் கண்காணித்து களத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார்.
முதல்வரின் இந்த நடவடிக்கை, ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தார் என்ற செயலை உயிர்ப்பிக்கும் வகையில் உள்ளது.
பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டது என்பது மக்களை திசை திருப்புவதற்காக அவரது பயண நிகழ்ச்சியில் செய்யப்பட்ட கடைசி முடிவாகும்.
முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட இயக்குனருடன் வெள்ள நிவாரணத்தை கண்காணித்து வருகிறார்.
அவரது நடவடிக்கை 2008-ஆம் ஆண்டு மும்பை ஓபராய் ஓட்டலில் குண்டுவெடிப்பு நடந்தபோது அப்போதைய மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஹோட்டலுக்கு வெளியே தயாரிப்பாளர் ஒருவருடன் படப்பிடிப்பு நடத்தியதை போல உள்ளது.
மாநில அரசின் நிவாரணம் என்பது தென் தமிழக மக்களுக்கு தொலைதூர கனவாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மழை வெள்ளம்: நெல்லையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!
ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
வெள்ள பாதிப்பு: தூத்துக்குடி நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம்!
IPL Auction 2024 : முதல் சுற்றில் விலை போகாத ஜாம்பவான்!
annamalai says udhayanidhi stalin shooting relief work
மணிப்பூர் பற்றி எரியும்போது உங்க ஜி என்ன வாசிச்சிகிட்டு இருந்தாராம்?
சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில் பெண்கள் பேக் செய்துகொண்டிருந்த போது நடுவில் அமர்ந்திருந்ததும், 25 கிலோ அரிசி முட்டையை ஒரு சுற்று சுற்றி தோளில் வைத்ததும், எந்தப் படத்தின் ஷூட்டிங்ண்ணா