தமிழகத்தின் பெருமையை பிரதமர் மோடி உலக அரங்கிற்கு எடுத்து சென்றுள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயண துவக்க விழா ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, “பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் சாமனியர்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. மோடி ஆட்சியில் நம்முடைய பாரத தாய் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்திருக்கிறாள். தமிழ் தாய் விழித்தெழுந்துவிட்டாளா என்ற கேள்வியை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.
கோடிக்கணக்கான மக்களை பசி என்ற கோரப்பிடியிலிருந்து பிரதமர் மோடி மீட்டு கொண்டு வந்திருக்கிறார். ’என் மண் என் மக்கள்’ யாத்திரை என்பது பாஜக தொண்டர்களின் யாத்திரை.
மோடியின் சாதனையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெருமையை மோடி உலக அரங்கில் எடுத்து சென்றுள்ளார். தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் முகவரியாக பிரதமர் மோடி உள்ளார்.
சின்ன குழந்தைகள் முதல் வகுப்பு படிக்கும் போது இந்தியா என்று கூற மாட்டார்கள். I.N.D.I.Aஎன்று எழுத்து கூட்டி தான் உச்சரிப்பார்கள். இந்தியா கூட்டணியில் பிரதமர்களாக திங்கள் கிழமை நிதிஷ் குமார், செவ்வாய்கிழமை மம்தா, புதன் கே.சி.ஆர், வியாழன் தாக்கரே, வெள்ளிக்கிழமை மற்றொருவர், சனி, ஞாயிறு விடுமுறைகளில் ராகுல் காந்தி செயல்படுவார்கள்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும் போது இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
பயிர்களை அழித்த என்.எல்.சி: அன்புமணி போராட்டமும் வன்முறையாக மாறிய பின்னணியும்!
பாமகவினர் வன்முறை: தங்கம் தென்னரசு கண்டனம்!