ஓ.பன்னீர் செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் இன்று (பிப்ரவரி 4) அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக தான் கடந்த 8 நாட்களாக பாஜக முயற்சி செய்து வந்தது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் நாங்கள் எப்பொழுதும் தலையிடுவதில்லை.
ஓ.பன்னீர் செல்வம் அண்ணனிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசிற்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் வேட்பாளர் படிவத்தில் நான் கையெழுத்திடத் தயார் என்றும் சில நிபந்தனைகளையும் எங்களிடம் முன் வைத்தார்.
ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும். சுயேட்சை சின்னத்திற்கு தேசிய கட்சியான பாஜக ஆதரவு அளிக்க முடியாது.
அதிமுகவில் ஒரு உறுதியான வலிமையான வேட்பாளர் அங்கு இதற்கு முன்பு மக்கள் பிரதிநிதியாக இருந்த வேட்பாளர் அந்த வேட்பாளர் பின்னால் அணிவகுத்து நின்று வெற்றி வாய்ப்பை அதிமுகவிற்கு கொடுக்க வேண்டும்.
அதிமுக தரப்பில் இருந்து நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. டிவிட்டரில் பாஜக நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததற்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
தங்கம் விலை: ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!
மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!