பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டன குரலை பதிவு செய்யாமல் வந்தால் கருப்பு கொடி போராட்டத்தை நடத்துவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள் மலர் வெளியீட்டு விழா மதுரை தனக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து அண்ணாமலை, ஜிகே வாசன், தமிழருவி மணியன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அண்ணாமலை,
எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. தனி மனிதருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி சேரும்போது மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.
ஜூலை 18ஆம் தேதி நடக்கவிருக்கும் என்டிஏ கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியா எந்த பக்கம் இருக்கிறது என்பது தெரியும்.
வருகிற 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனக் குரலை பதிவு செய்யாமல் வந்தால் நாங்கள் கருப்பு கொடி போராட்டத்தை நடத்துவோம்.
ஜி.கே.வாசன்,
காங்கிரஸ் தலைமையிலான கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று டெல்டா விவசாயிகளை மீண்டும் வஞ்சிக்க தொடங்கி இருக்கிறது. பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
தமிழருவி மணியன்,
தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, காமராஜர் மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் அங்கம் வகிக்கும். பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திமுகவின் ஊழல் ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை களம் கண்டு வருகிறார். மாற்று அரசியல் வரவேண்டும். அகில இந்திய அளவில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசின் தொடர்ச்சி என்பது இந்தியாவிற்கு அவசியம்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கிரைம் திரில்லர் கண்ணிவெடி!
வெற்றி நிச்சயம்..