கள்ளக்குறிச்சி மரணம்: அமித்ஷாவிடம் ரிப்போர்ட்… அண்ணாமலை தகவல்!

அரசியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வீடு வீடாக சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 20) ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னிடம் கேட்டறிந்தார். இதுதொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஜூன் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்… ஒருத்தரையும் விடக்கூடாது… கொந்தளித்த விஷால்

கள்ளக்குறிச்சி மரணம்… சைலண்ட் மோடில் திரை பிரபலங்கள் : ஜெயக்குமார் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

5 thoughts on “கள்ளக்குறிச்சி மரணம்: அமித்ஷாவிடம் ரிப்போர்ட்… அண்ணாமலை தகவல்!

  1. how can i get clomid without a prescription [url=https://clomid.store/#]can you get clomid without a prescription[/url] get clomid without rx

  2. கள்ள சாராயத்துக்கு காரணமா இருக்கறவன்களை புடிச்சு தண்டனை வாங்கி கொடுங்கய்யா, அப்படியெ சில மாதம் முன்னால குஜராத்லயும் அதே மாதிரி கள்ள சாராய சாவுங்க விசயத்துல நடவடிக்கை எடுங்கைய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *