மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவை பற்றி மோசமாக பேச எனக்கு அருகதை இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 12-ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகங்களிலும் ஊழல் மலிந்துள்ளது. ஊழல் செய்த முன்னாள் முதல்வர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழலில் தமிழகம் தான் முதலில் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நேற்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அண்ணாமலையை கண்டித்தனர்.
இதுகுறித்து அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணி கட்சிகள் விரும்பியதையெல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் “ஆங்கில நாளேடுக்கு நான் அளித்த பேட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்துள்ளனர்.
ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீது நான் தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைக்க மாட்டேன்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் ஆளுமை, நிர்வாகத்திறமை, ஏழை மக்களுக்கு அவர் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து பல இடங்களில் நான் பேசியுள்ளேன்.
அது டாக்குமெண்ட் வீடியோவாக பொதுவெளியில் உள்ளது. அவரை போல ஆளுமை மிக்க தலைவராக வர வேண்டும் என்று முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
ஜெயலலிதாவை அவமானப்படுத்திவிட்டதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊழல் புரையோடியிருக்கிறது. ஊழல் குறித்து நான் தொடர்ந்து பேசுகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பேசவில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.
கூட்டணியில் இருப்பதால் ஒருவரை ஒருவர் மதிக்கின்றோம். ஜெயலலிதாவின் ஆளுமையை பார்த்து நான் வியந்து பேசியிருக்கின்றேன். ஜெயலலிதாவை பற்றி மோசமாக நான் பேச மாட்டேன். எனக்கு அந்த அருகதை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
கொஞ்சம் காதல்… நிறைய நகைச்சுவை: ’தீயா வேலை செய்யணும் குமாரு’
செந்தில் பாலாஜி வழக்கு: புதிய அமர்வுக்கு மாற்றம்!
செந்தில் பாலாஜி கேஸ் டைரி : புட்டு புட்டு வைத்த அண்ணாமலை
சபரீசன் செந்தில் பாலாஜியை பார்த்தது ஏன்? சி.வி.சண்முகம்
திமுக எதிர்பார்த்தது நடக்கலியே..ஐயோ வேதனை..😋