அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை, “1956-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ் சங்கம் மாநாட்டில் முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு மதுரையை விட்டு ஓடிப்போனார்” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு திமுக, அதிமுக கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் “தி இந்து” ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று வெளியான “தி இந்து” ஆங்கில நாளிதழில் 1956-ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்று “தி இந்து” ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “என்னை பொறுத்தவரை அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. நான் சரித்திரத்தில் நடந்த உண்மையை பேசியுள்ளேன். அண்ணாவை தரக்குறைவாக பேசவில்லை.
முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டதாக நான் கூறியதை முத்துராமலிங்க தேவருக்கு நெருக்கமான வரலாற்று ஆசிரியர்கள் சிலர் ஆதரித்து பேசுகிறார்கள்.
நான் பேசியது தி இந்து ஆங்கில நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 ஆவண பதிப்பகத்தில் தெளிவாக உள்ளது. இந்து குழுமத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
மாலினி பார்த்தசாரதி இந்து குழுமம் எத்திக்ஸ் குறித்து குற்றம் சாட்டுகிறார்கள். இந்து குழுமம் ஆவண பதிப்பகத்தை வெளியிட வேண்டும்.
1998-ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது ரயில்வே நிகழ்ச்சி ஒன்றில் 1956 நிகழ்வை குறிப்பிட்டு பேசியுள்ளார். அதனை நான் வெளியிட தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“அதிமுக பாஜக இடையே பிரச்சனையில்லை” – அண்ணாமலை
காவிரி விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்
காவிரி விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
‘லியோ’ போஸ்டர்கள் சொல்வது என்ன?
பெட்ரோல் நிலையம் அமைக்க கடனுதவி!
ஆக ஒரு முடிவோடத்தான் இருக்காங்க போல